மாவை அண்ணன் மறைந்தாலும் மக்களுக்காக அவர் எதிர்பார்த்தவற்றை நிச்சயம் செய்வோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0
24

அறவழிப் போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில், தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பி வந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இன்று, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அநீதிக்கு எதிராகவும், நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிந்து குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, ஜே.வி.பியின் ஸ்தாபகர் தோழர் ரோஹண விஜேவீரவின் போராட்டங்களைக்கூட, நேர்கொண்ட பார்வையுடன் அவதானித்தனர்.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக, ஜே.பி.யின் அணுகுமுறை தொடர்பில் ஆதரவு போக்கை கடைபிடித்தவர்.

அந்தவகையில், மாவை அண்ணன் மறைந்தாலும், மக்களுக்காக அவர் எதிர்பார்த்தவற்றை நிச்சயம் செய்வோம்.

என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.