வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து எதிர்காலத்தை இருளாக்கிவிடாதீர்கள் என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
‘பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மிக வேகமாக முன்னேறிய ஒரே நாடு இலங்கை என்பதை சர்வதேச சமூகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வாறானதொரு புரட்சியை செய்ததன் மூலம் அடுத்த 5 வருடங்களில் நிச்சயமாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். ‘வாய்ப்பு’ கேட்கும் அரசியல்வாதிகளிடம் தமது எதிர்காலத்தை ஒப்படைத்து, நாட்டையும் எதிர்காலத்தையும் இருளடையச் செய்ய வேண்டாம்.
இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக 03 பிரதான அரசியல் கட்சிகள் நாட்டுக்காக ஒன்றிணைந்துள்ளன. சஜித்துக்கு வழங்கப்படும் வாக்கு, அநுரவுக்கு தட்டில் வைத்து வழங்கும் வாக்காகும்.
அதேபோன்று நாமலுக்கு அளிக்கப்படும் வாக்கும் அநுரவுக்கு தட்டில் வைத்து வழங்கும் வாக்கு என்பதை பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.’