நேற்றை தினம் 68 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து மினுவங்கொட கொத்தணியின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த 68 பேரில் 22 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்கள் எனவும் 46 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (16) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களுள் 36 பேர் மினுவங்கொட பகுதியையும் 14 பேர் கம்பஹா பகுதியையும் 9 பேர் கட்டுநாயக்க பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சேனபுர, வத்தள ஆகிய பகுதிகளில் இருந்து ஒருவர் வீதமாகவும் கந்தாணையில் இருந்து மூவரும் கிரிந்திவெல மற்றும் கொழும்பில் இருந்து இருவர் வீதமாகவும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திஸ்ஸமஹராம பகுதியில் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் எனவும் குறித்த நபர் திருமண வீட்டிற்கு சென்றிருந்த வேலையில் அங்கு வந்த கம்பஹா பகுதியை சேர்ந்தவர்களால் தொற்றுக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு HNB யின் மேல் மாடியில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டதுடன் அந்த மாடி மாத்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.