தற்பொழுது தனிமைப்படுத்தல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களிலும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று (16) காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று COVID 19 வைரசு பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் இன்றை தினம் நடந்து கொள்வது மிக முக்கியம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொது இடங்களுக்கு வருகை தரும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் இல்லையெனில் சமூக இடைவௌியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.