முச்சக்கரவண்டி கவிழ்ந்து அதில் பொறுதப்பட்டிருந்த உட்ரெக் தலையில் குத்தியதில் படுகாயமடைந்து பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிகம்பமுன்வ, பொல்கஸ்ஓவிட்ட, என்ற இடத்தில் வசித்த நயனா குமாரி என்ற 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் தனது கணவருடன் பிலியந்தலை, சித்தமுல்ல பிரதேசத்தில் தனியார் கடையொன்றை திறப்பதற்காக முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது, குடமடுவ பள்ளத்தின் நடுவில் முன்னால் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த கணவருடன் மனைவியும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த கணவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.