26.2 C
Colombo
Wednesday, October 9, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 39ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் நினைவஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அன்னதானம் றிச்சாட் தவப்பிரகாசம் தலைமையில் நினைவஞ்சலி இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நினைவஞ்சலி நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வியற்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, வடமாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles