முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக வீதியில் அடையாளப்படத்தப்பட்டிருந்த வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொலிஸாரினால் அழிக்கப்பட்டன. முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வாக்களிப்பு நிலைத்திற்கு முன்பாக வீதியில் அடையாளப்படத்தப்பட்டிருந்த வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொலிஸாரினால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்களிப்பப் பணிகள் ஆரம்பமாகின.
வீதியில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் அடையாளப்படத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தேர்தல் கண்காணிப்பாளர்களால் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததன் பின்னர் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் வேட்பாளர்களின் அடையாளங்கள் அகற்றப்பட்டன.