முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு மரண விசாரணை அதிகாரி?

0
53

ஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்கும் வகையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மரணம் சம்பவிக்கும் போது முஸ்லிம்கள் தங்களது ஜனாஸாக்களை சமய வழிமுறைக்கு அமைய 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிச்சடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த நியமனங்களை மேற்கொள்ளுமாறு அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.