26.9 C
Colombo
Thursday, December 7, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மூடப்பட்டுள்ள 2 கிராமங்களையும் இன்று மாலை மீண்டும் திறக்க நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள இரு கிராமங்களையும் இன்று (12) மாலை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி. வினோதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி மாவட்ட பொது வைத்திய சாலையில் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 9 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபருடன் ஒன்றாக இருந்து முதலாவது நபர் என அடையாளம் காணப்பட்ட 41 பேரூக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இவர்களின் 8 பேரூக்கு இது வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த 8 பேரூக்கும் மீண்டும் பி.சீ.ஆர். பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது.

இதனை விட இவர்களுடன் தொடர்பு பட்ட இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என கூறப்படுகின்றவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இது வரையில் முதல் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 103 பேரூம், இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேரூம் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 7 பேர் பட்டித்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட நிர்மாண பகுதியிலே தங்கி உள்ளனர்.

ஒருவர் மன்னார் நகரில் வரையறுக்கப்பட்ட வீடு ஒன்றில் தங்கி இருந்தார்.இவர்களில் 5 பேர் நேற்று இரவு சிகிச்சை நிலையங்களுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மூவரையும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டித்தோட்டம் பகுதியிலும் மேலும் ஒருவர் மன்னார் நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்தார்.

அவர்களுடன் தொடர்பு பட்டவர்களை கண்டு பிடிப்பதற்காக பட்டித்தோட்டம் மற்றும் மன்னார் பெரியகடை போன்ற பகுதிகளை தற்காலிகமாக மூடியுள்ளோம்.

முழுமையான நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை குறித்த பகுதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மன்னார் பெரிய கடை மற்றும் பட்டி தோட்டம் ஆகிய இரு கிராமங்களும் மழுமையாக மூடப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் இருந்து வெளியில் செல்லவும்,குறித்த கிராமத்திற்கு உள்ளே செல்லவம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் பெரிய கடை கிராமம் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால் குறித்த பகுதிகளில் உள்ள மன்னார் மீன் சந்தை, மரக்கறி வியாபார சந்தை மற்றும் பல்வேறு வர்த்தக நிலைங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

யாழில் தத்திகளின் தாக்கத்தினால் நெற் செய்கை பாதிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நெற் செய்கையில், தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றார் எனவும், நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.