கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவுகளில் நேற்று உடன்
நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.
கம்பஹா, கிரிந்திவெல, தம்பே, பூகோட, வீரகுல, கணேமுள்ள, வெலிவேரிய, மல்வத்முகிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, கந்தான மற்றும் ஜா-எல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்வாறு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கம்பஹா பொலிஸ் பிரிவிலும் நேற்று முன்தினம் மாலை 6 மணி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது