அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயத்தில் சந்தேகம் உள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேசவுள்ள விடயங்கள் குறித்த உண்மையை அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் மிக முக்கிய அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் இந்த கேள்விக்கு பதிலளிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் மற்றும் ஏனைய அவசரமானவிடயங்களின் போது மாத்திரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விஜயங்களை மேற்கொள்வது வழமை என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மைக்பொம்பியோவின் இந்த விஜயத்தின் போது எம்.சி.சி உடன்படிக்கை குறித்து ஆராயப்படும் என கருதுவதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அவசியமான கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது, இலங்கையில் எம்.சி.சி உடன்படிக்கை குறித்த அலுவலகத்தை அமெரிக்கா தொடர்ந்தும் வைத்திருக்கின்றது எனவும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.