24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் ‘உண்ணி ‘காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என்கிறார் மருத்துவர் யமுனானந்தா

உண்ணிக் காய்ச்சல் தொடர்பில் கூடிய அவதானம் தேவை என யாழ். போதனா மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகரித்துவரும் இக்காலப் பகுதியில் எமது பிரதேசத்தில் காய்ச்சல் நோயுடன் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் இக்காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகிறது எனப் பார்க்கும்போது, பொதுவாக வைரஸ் காய்ச்சல் எமது பிரதேசத்தில் காணப்படுகிறது. அடுத்ததாக டெங்குக் காய்ச்சல் பாதிப்பும் தற்போது அதிகரித்து வருகின்றது.

உண்ணிக் காய்ச்சல் என்ற ஒரு பக்றீரியா காய்ச்சலும் ஏற்படுகின்றது. இதுதவிர எலிக்காய்ச்சல், காச நோய்க்குரிய காய்ச்சல் என்பன ஏற்படுகின்றன.

எனவே காய்ச்சல் நோய்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதை அறிந்து எவ்வாறு சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது மிக முக்கியமானது.

அந்த வகையில் உண்ணிக் காய்ச்சல் தற்போது அதிகளவில் தாக்கம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருவகாலங்கள் ஆரம்பிக்கும்போது உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை நான், கோப்பாய் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில் அவதானித்தேன்.

வயல் வேலை செய்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

அடுத்ததாக அறுவடை காலங்களிலும் அதிகளவானோர் உண்ணிக் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். உண்ணிக்காய்ச்சல் என்பது ஒரு வைரஸால் ஏற்படுகின்றது.

இது பொதுவாக தளினால் பரப்பப்படுகின்றது
பொதுவாக எலி, அணில், நாய், பூனை மற்றும் மிருகங்களில் காணப்படலாம்.
தெள்ளு உடலில் கடித்து அந்தக் கிருமி உடலுக்குள் செல்வதால் இந்த நோய் ஏற்படுகின்றது. இதனால் காய்ச்சல், உடல் நோ ஏற்படும். இந்த நோய்க்கு உரிய சிகிச்சையை உடனளிக்க வேண்டும்.

உண்ணிக் காய்ச்சலை இனங்கண்டபின் அவர்கள் தோட்டங்களில் வேலை செய்தவர்கள்? அல்லது வீடுகளில் மிருகங்களோடு பழகுபவர்களாக இருக்கிறார்களா? என்ற விடயங்களை அறிந்த பின்னர் அவர்களுக்குரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
மிருகங்களோடு பழகுபவர்களுக்கு தொற்று ஏற்படுவது சாதாரணமாகும்.

அத்தோடு உடலில் தெள்ளு கடித்த காயம் ஏற்படுமாயின் அந்தக் காயத்தின் மூலம் கிருமி உடலுக்குள் செல்கின்றது. இவற்றை அடையாளம் காணத் தவறும் பட்சத்தில் நோய் கடுமையாகி சில வேளைகளில் உயிரிழப்பும் ஏற்படலாம்.

ஆனால், இந்த நோய்க்கிருமிக்குரிய சிகிச்சை மிகவும் சுலபமானது. வைரஸ் எதிர்ப்பு மருந்தைக் கொடுப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம். எனவே உண்ணிக் காய்ச்சல் தொடர்பில் யாரும் பயப்படத் தேவையில்லை. உண்ணிக் காய்ச்சல் தோட்டவேலை செய்பவர்களுக்கே அதிகம் ஏற்படுகின்றது.

எனவே, உடல் சுத்தம் மிக முக்கியமானது. தோட்டத்துக்குச் சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். அத்தோடு ஆடைகளை தினமும் துவைத்து பாவிப்பதன் மூலம் உடலில் கிருமித் தொற்று – உண்ணிக் காய்ச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
உண்ணிக் காய்ச்சல் விரைவில் இனங்காணப்படாதவிடத்து மரணத்தை ஏற்படுத்தலாம். எனவே இது தொடர்பில் விழிப்புணர்வு அவசியம் எனத் தெரிவித்தார்.





Related Articles

- Advertisement -spot_img

Latest Articles