26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் நீரிழிவு நோயைத் தடுக்கும் விழிப்புணர்வுப் பேரணி முன்னெடுப்பு

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பொது நல வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீரழிவு தினத்தை முன்னிட்டு நீரழிவு நோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த முகமாக யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் நீரழிவு கழகத்தினரின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்திய சாலையில் இருந்து ஆரம்பமாகிய விழிப்புணர்வு பேரணி, வேம்படிச் சந்தியை அடைந்து, அங்கிருந்து பிரதான வீதி வழியாக யாழ்.மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது. பேரணி நகர்ந்த வீதிகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளின் மாணவ,மாணவிகளும் பேரணியில் இணைந்து கொண்டனர். மாவட்ட செயலகத்தில் சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள்
இடம்பெற்றது விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நிகழ்வுகளில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் தாதியர்கள், யாழ் நகர பாடசாலை மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்,

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles