யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
கல்லூரி அதிபர் தலைமையில் பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம் எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் நடைபெற்றன.
கல்லூரிக்கு அருகில் உள்ள பிரதான வீதியூடாக சிறுவர் உரிமைகள் தொடர்பில், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் விழிப்புணர்வு
ஊர்வலமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
மாணவர்கள் பலூன்களைத் தாங்கியவாறு, சிறுவர் உரிமைகள் தொடர்பான கோசங்களை எழுப்பியவாறு, விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கெடுத்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலையை வந்தடைந்ததும், சமூகப் பெரியார்கள் மதிப்பளிக்கப்பட்டு, அவர்களிடம் மாணவர்கள் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டனர்.