28 C
Colombo
Friday, July 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ். ஆனைக்கோட்டையில் அகழ்வுப் பணி முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பெருங்கற்கால சான்றுப் பொருட்கள் தொடர்பில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப.புஷ்பரட்;னத்தின்; முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் ஆனைக்கோட்டையில் கடந்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதில் பெருங்கற்கால மட்பாண்ட சிதைவுகள், உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்றைய அகழ்வு பணியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் விரிவுரையாளர்கள், தொல்லியல் கலாசார மாணவர்கள், தென்னிலங்கை தொல்லியல் அறிஞர்கள், யாழ்ப்பாண பிராந்திய தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வு உத்தியோகஸ்தர்கள், பிற தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து கொண்டனர்.

குறித்த அகழ்வாய்வை இம்மாதம் 20ஆம் திகதி வரை மேற்கொள்வதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பில் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப.புஷ்பரட்;ணம் கருத்து தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles