யாழ். கட்டைக்காட்டில் அரங்கு திறப்பு!

0
69

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு மைதானத்தில், புதிதாக அமைக்கப்பட்ட அரங்கு, நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கழக தலைவர் பி.றஜித் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கட்டைக்காடு பங்குத்தந்தை அ.அமல்ராஜ் அடிகளார், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர், கட்டைக்காடு அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர், சென் மேரிஸ் நாடக மன்ற தலைவர், சென் மேரிஸ் கடற்தொழிலாளர் சங்க தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.

மரியாம்பிள்ளை யாக்கோப் றஜீத்குமார் நினைவாக, அவரது உறவினரால், 42 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சென் மேரிஸ் விளையாட்டரங்கு, செல்வக்குமாரால் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, கட்டைக்காடு சென் மேரிஸ் அணிக்கும் வவுனியா இளம் தென்றல் அணிக்கும் இடையிலான, சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.
இதில், ஐந்துக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில், கட்டைக்காடு சென் மேரிஸ் அணி வெற்றி பெற்றது.

இறுதியில், விளையாட்டு அரங்கை நிர்மானித்து கொடுத்த கட்டடத் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டதுடன், வவுனியா இளந்தென்றல் அணியினருக்கும், நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
அத்துடன், அரங்கை அமைத்துக் கொடுத்த செல்வக்குமார், பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிவு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.