யாழ்ப்பாணம் கோட்டை நகர்ப் பகுதி மற்றும் பண்ணைப் பகுதியில் பிளாஸ்ரிக் பொருட்களை அகற்றும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
கிளீன் அப் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் நகரை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் றோட்டறி கழகத்தின் கீழ் இயங்கும் யாழ் பெனின்சுலா றோட்டறாக்ட் கழகம், நல்லூர் பாரம்பரிய றோட்டறாக்ட் கழகம், சுழிபுரம் றோட்டறாக்ட் கழகம் ஆகிய கழகங்கள் இணைந்து சுத்தப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுத்தன.
இதன்போது கோட்டை பகுதியிலுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டதுடன் பண்ணை கடற்கரையோரத்தில் காணப்பட்ட ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் இதன்போது அப்புறப்படுத்தப்பட்டன.
அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகள் யாழ் மாநகர சபை கழிவகற்றல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. கழிவகற்றல் செயற்பாட்டில் கழகங்களின் வழிகாட்டி கழக ஒருங்கிணைப்பாளர்கள், றோட்டறாக்ட் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.