28 C
Colombo
Saturday, September 18, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ். தொண்டைமானாறு கடற்பரப்பில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு முதல் மாமுனை வரையான கடற்கரையில் 109 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினால் தொண்டைமானாறு பிரதேசத்திலிருந்து மாமுனை வரையான கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே, 109 கிலோ 150 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்படட்டுள்ளனர்.

கடற்படை பி-177 கடலோர பாதுகாப்பு கப்பல் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 02 பொதிகளில் அடைக்கப்பட்ட கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் பி-015 கடலோர பாதுகாப்பு ரோந்துப் படையினர் நடாத்திய மேலதிக தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அப்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட கேரளா கஞ்சா பரல் மீட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொத்தமாக 109 கிலோகிராம் மற்றும் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 32 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமென தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 26 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றிய பொருட்களையம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்

பொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...

திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால் வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும்

பொருளாதார மத்திய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில், நடமாடும் மரக்கறி வியாபாரிகள், அதிக விலைக்கு மரக்கறிகளை விற்பனை செய்தால், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துசெய்யப்படும் என்று கொழும்பு அரசாங்க அதிபர்...

திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு உப குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய டபிள்யூ டி வீரசிங்க தலைமையில்...

அம்பாறை காரைதீவில் தடுப்பூசிகள் ஏற்றல்

காரைதீவு சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களில் இன்று 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-17 தப்பூசி வழங்கப்பட்;டது. காரைதீவு சுகாதார வைத்திய...

மட்டக்களப்பு காத்தான்குடியில் கொரோனா தடுப்பூசி அட்டைகள் சோதனை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குள் செல்லும் பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போட்ட அட்டைகள் வைத்திருப்போர் மாத்திரமே...

மடட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தடுப்பூசிகள் ஏற்றல்

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையில் தொடர்;ச்சியாக முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. களுவாஞ்சிகுடி பிராந்தியத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட 24 ஆயிரம்...