யாழ் பருத்தித்துறை புதிய சந்தை : மரக்கறி வியாபாரிகள் அதிருப்தி

0
22

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை சந்தை மரக்கறி வியாபாரிகள், புதிய மரக்கறி சந்தை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட சந்தையில், போதிய இட வசதி இல்லை எனவும், பேருந்து தரிப்பிடத்தில் இருந்து, தொலைவில் இருப்பதாகவும், வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், தற்போது பயன்படுத்தி வரும் சந்தையை, மேல் மாடியில் இருந்து கீழ்த்தளத்திற்கு மாற்றித் தருமாறும், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதிய சந்தையானது, நேற்று, வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.