

யாழ் மாநகரசபை முதல்வர் ஆனோல்ட் குருநகர் – ஜெட்டி, சின்னகடை மாநகர சந்தைத் தொகுதி மற்றும் கோட்டை பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு விசேட களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.





குறித்த பகுதிகளின் சுகாதார செயற்பாடுகள், தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், தேவைகளை நிறைவேற்றுவதறற்கான உடனடித்தீர்வுளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மேலும் குறிப்பாக திண்மக்கழிவகற்றல் முறையாக அகற்றப்படாமை தொடர்பில் கண்டறிந்தார். திண்மக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தற்பொழுது இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.