யுத்தம் இடம்பெற்றபோது, கிழக்கு மாகாணத்தில் பல தீவிரவாத குழுக்கள் காணப்பட்டதாக முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பது என்ற போர்வையில் கிழக்கில் பல தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டதாக முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
2008ம் ஆண்டு முதல் முஸ்லிம் தீவிரவாதிகள் ஆயுதமேந்திய தீவிரவாதம் குறித்த போதனைகளில் ஈடுபட்டுவந்தனர் எனவும் கிழக்கு மாகாணத்துக்கான முன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்து வந்தனர் என தெரிவித்துள்ள அந்த அதிகாரி அக்காலப்பகுதியில் உருவான 18 அமைப்புகளில் ஒன்றில் சஹ்ரான் என்ற நபரும் காணப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்; ஹிஸ்புல்லா, அரசியல்வாதி அதாவுல்லா போன்றவர்கள் இந்த அமைப்புகளுக்கு ஆதரவளித்தனர் எனவும், முன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை அவர் இந்த தீவிரவாத குழுக்களை முறியடிப்பது குறித்து அக்கறை காட்டினார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.