24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரஜினிகாந்த் அடுத்த காமெடி பீஸ்!

தமிழ் சினிமாவில் 120 படங்களுக்கும் மேல் நடித்தும் 60 சீரியல்களில் நடித்தும் 2,500 மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமாகியவர் கவிதாலயா கிருஷ்ணன்.

பொய்க்கால் குதிரை என்ற படத்தில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமாகிய கிருஷ்ணன், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கமல், ரஜினி பற்றிய ஒருசில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில், கமல் ஹாசனை தமிழ் சினிமா கொண்டாடவில்லை. அவர் நம்முடைய பொக்கிஷம். அடுத்த தலைமுறையினர் ரஜினிகாந்தையே மறந்துவிடுவார்கள். அவருக்கு விழா எடுக்கலாம்.

150 கோடி வசூல் ஆவதற்காக எடுப்பார்களா? அடுத்த தலைமுறையினருக்கு ரஜினி ஒரு காமெடி பீஸ். இதை ஏற்கனவே ஒருமுறை கூறியதால் ரஜினி ரசிகர்கள் என் வீட்டுக்கே வந்து அடிக்க வந்துவிட்டார்கள். ரஜினி சாரே எனக்கு கால் செய்திருக்கிறார்.

கமல் சார் மெனக்கெடுத்ததை போல் ரஜினி சார் மெனக்கெடவில்லை. அவர், ஆன்மீகவாதி, பெரிய ஆளாகிவிட்டோம் என்பதை இன்றும் நம்பவில்லை என்று கவிதாலயா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles