24 C
Colombo
Wednesday, February 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரஜினி படம் ரிலீஸ் தள்ளி வைப்பு?

ஜெயிலர் படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் உள்ளனர். தமன்னா சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்தார். ஜெயிலர் படத்தின் டீசரை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டனர். அதில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது. ஜெயிலர் படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தள்ளிவைப்புக்கு காரணம் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் என்று கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை ஏப்ரல் 28-ந்தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள். அந்த படத்தோடு மோதலை தவிர்க்கவே ஜெயிலர் படத்தை தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.

Related Articles

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் நடத்தி செல்லப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை, சேரம் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாடி வீட்டில் நடத்தி செல்லப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

கொழும்பு, மொரட்டுவை ராவதாவத்த பிரதேசத்தில், சிறியளவிலான ஆடைத்தொழிற்சாலை நடத்தி செல்லப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகம வைத்தியசாலையில் மின்சாரம் தடைப்பட்டதால் நோயாளர்கள், வைத்தியர்கள் அவதி

கம்பஹா, ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வைத்தியசாலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணித்தியாலம் வரை மின்சாரம் இன்றி நோயாளர்கள், வைத்தியர்கள் மற்றும்...