ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 47 வருட அரசியல் வாழ்க்கையில், நாட்டிற்கு எதனையும் செய்யவில்லை எனவும், ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்படுத்தப்பட்ட யூலைக் கலவரத்தின் மூலம், தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாண அலுவலகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.