29 C
Colombo
Thursday, June 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரஷ்யாவிடமிருந்து ஃபின்லாந்துக்கு அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ தூதர்

ரஷ்யாவிடமிருந்து ஃபின்லாந்துக்கு எந்த ஒரு நேரடி அச்சுறுத்தலும் இல்லை என நேட்டோ அமைப்புக்கான ஃபின்லாந்து தூதர் கிளவுஸ் கோர்கோனன் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஃபின்லாந்து நாட்டின் அதிபர் சவுலி நினிஸ்டோ மற்றும் அந்த நாட்டின் பிரதமர் சன்னா மரின் இருவரும் ஃபின்லாந்து எந்த ஒரு கால தாமதமுமின்றி நேட்டோ அமைப்பில் சேர உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறினர். இதனைத் தொடர்ந்து ஃபின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ நாடாளுமன்ற முடிவுக்குப் பின்னர் அடுத்த வாரத்தின் இடையில் ஃபின்லாந்து நேட்டோவில் இணைவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்தார்.
நேட்டோவில் இணைவது குறித்து கிளவுஸ் கோர்கோனன் கூறியதாவது, “ ஃபின்லாந்துக்கு ரஷ்யாவினால் இதுவரை எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை. இருப்பினும், நாங்கள் எங்களது பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையாக உள்ளோம். உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு தலைநகர் ஹெல்சின்கியில் நாங்கள் பாதுகாப்பினை அதிகப்படுத்தியுள்ளோம்” என்றார்.
உக்ரைனில் நிலவும் ராணுவத் தாக்குதல் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நேட்டோ அமைப்பில் சேராமல் நடுநிலை வகித்து வரும் ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாட்டினை கலக்கமடையச் செய்துள்ளது. கடந்த மார்ச மாதம் நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர விரும்பினால் அதற்கான விண்ணப்பங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய இரு நாடுகளுமே நேட்டோ அமைப்பில் சேர விரும்புவதாக அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தியுள்ளன. அதே போல இந்த இரு ஐரோப்பிய நாடுகளின் முடிவுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளன.
ஃபின்லாந்தின் இந்த முடிவுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஃபின்லாந்து திடீரென தனது வெளியுறவுக் கொள்கையில் இப்படி ஒரு பெரிய முடிவை எடுக்குமானால் அதனை ராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சந்திக்கும் முடிவிற்கு ரஷ்யா தள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

Related Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

காத்தான்குடியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.இதன் போது புகைத்தலினால் மது...

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதழவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு...