ரஸ்யா உடனான நட்பைப் பலப்படுத்த, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆர்வம் காட்டியுள்ளார். ரஸ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர், உத்தியோகபூர்வ விஜயமாக, வட கொரியாவிற்கு விஜயம் செய்த நிலையில், வடகொரிய ஜனாதிபதியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஸ்யா, தமக்கு ஏற்பட்டுள்ள ஆயுத தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, தமது அயல் நாடுகளிடம், உதவிகளைக் கோரி வருவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தச் சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருதரப்பு சந்திப்புக்களின் பின், ரஸ்யா உடனான நட்பை மேலும் பலப்படுத்த விரும்புவதாக வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.