உயிர்த்த ஞாயிறுதின குண்டு வெடிப்புகளுக்கு ராஜபக்ஸ குடும்பத்துக்கு நெருக்கமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சனல் – 4 தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகவுள்ள ஆவணப்படுத்ததிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ராஜபக்ஸக்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதற்காக இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலே மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த நபர்களுடன் ஒரு சதித்திட்டம் தீட்டுவதற்காக 2018இல் ஒரு சந்திப்பு இடம்பெற்றது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
‘இந்தச் சந்திப்பு இடம்பெற்றதுடன் சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்ஸக்களுக்கு தேவை இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல்.
அப்போதுதான் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி யாவதற்கு ஒரே வழி’ – எனக் கூறினார் என்று அன்சார் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
‘தாக்குதல் திட்டம்’ என்பது ஓரிரு நாள்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல.
அது இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஆறு மாதங்களுக்குப் பின்னர் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியைப் பிடித்தபோது சுரேஷ் சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார் என ஆசாத் மௌலானா அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.