உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்கமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனு இம்மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (16) மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மனு அவசர தேவைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தால் உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் குறித்த மனுவை இம்மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.