27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரிஷாட் பதியூதீனின் சகோதரர் விடுதலை: சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று 2020.10.09 அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது, எவ்வித சட்ட அனுமதியுமின்றி ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சியின் 100இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மேன்மைதங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...