இலங்கையின் பல பாகங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில்
பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்த அடிப்படையிலேயே வட மாகாணங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
பேலியகொடை மீன் சந்தையில்தொற்று உறுதியான நிலையில் யாழ் , மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து பேலியகொடைக்கு குளிர்சாதன வண்டிகளில் மீன் எடுத்துச் செல்லப்படுகின்றது அந்த அடிப்படையிலே வட மாகாத்சிலிருந்தும்பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் மொத்த வியாபாரத்திற்காக எடுத்துச்செல்ல படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தி லுக்கு உட்படுத்தி இருக்கின்றோம் அவர்களுக்கான PCR பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
PCRபரிசோதனையின் முடிவுகளின் பின்னரே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.