வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார். ஆளுநர் செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற நிகழ்வில் மதத் தலைவர்களின் ஆசியுடன் கடமையேற்றார்.
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன், வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டு, கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்திருந்தார். இன்றைய கடமையேற்பு நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மாவட்ட பதில் அரசாங்க அதிபர், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.