தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் ஐனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவை வழங்க வணிகர் கழகம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் நேற்று வணிகர் கழகத்திற்கு சென்ற பா.அரியநேத்திரன் வணிகர் கழக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை வணிகர் கழகம் பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.