வருமான வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மத்திய வங்கியின் 7 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்கவாதிகள் மத்திய வங்கிக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சுகபோகத்தை அனுபவிக்கின்றனர், சாதாரண ஊழியர்கள் மீது வரிச்சுமையை சுமத்துகின்றனர் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்துரைத்த மத்திய வங்கியின் நிறைவேற்று ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜயத்து பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் வரியை செலுத்தி வரும் தரப்பினர்.
எனினும் தற்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், ஏதேச்சதிகார போக்கில் வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதால் கடந்த மாதம் செலுத்திய வரியானது 6, 7 மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த வரி அதிகரிப்பை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.