யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுர்த்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.
உயிரிழந்தவர் அம்பன் குடத்தனையைச் சேர்ந்த 54 வயதான கந்தசாமி வினோகரன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த 30 வயதான தயாரூபன் வைஷ்ணவன் என்ற இளைஞர் காணாமல்போயுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையினர் மற்றும் அந்தப் பகுதி மீனவர்களின் உதவியுடன் அவரைத் தேடும் பணி தொடர்கிறது. இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.