யாழ்ப்பாணம், வடமராட்சி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி – துன்னாலை வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயிலின் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்று, 9.15 க்கு கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 17 தினங்கள் நடைபெறும் பெருந்திருவிழாவில் 12ஆம் திகதி பாம்புத் திருவிழாவும் மறுநாள் 13ஆம் திகதி கம்சன் திருவிழாவும்
14ஆம் திகதி வேட்டை திருவிழாவும் நடைபெறுவுள்ளன.
15ஆம் திகதி சப்பைரதத் திருவிழாவும், 16ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 17ஆம் திகதி சமுத்திர தீர்த்தமும் 18ஆம் திகதி கேணித் தீர்த்தமும் நடைபெறவுள்ளன.
சைவ சமய முறைப்படி திருவிழாவில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.