வவுனியா மாவட்டத்தில் வாழும் மக்கள் பெருமளவில் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில், மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபர தகவல்களின்படி 2 ஆயிரத்து 901 பேர் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு பாதிப்படைந்தவர்களில் பெருமளவானோர் வறுமைக்கோட்டுக்கு உள்ளானவர்கள் எனவும், நோயால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 901 பேரில் 2 ஆயிரத்து 751 பேருக்கு மட்டுமே அரசினால் மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனையவர்களான 150 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் எனவும் மாவட்ட செயலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் அதிகளவிலான மக்கள் சிறுநீரக பாதிப்புக்குள்ளாவது அந்த மாவட்டத்தின் நீர் தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய உடனடித் தேவையுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.