வவுனியாவில் மக்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கிய இராணுவம்!

0
65

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள, 16 ஆவது
சிங்க றெஜிமென்ட் படைப் பிரிவின் ஏற்பாட்டில், நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள, கண் பார்வை குறைந்த மக்களுக்கு, மூக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, மூக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டதுடன், கண் பார்வை குறைந்த மக்களுக்கு, மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில், அதிகளவான மக்கள் பங்கேற்று, பயன் பெற்றுக்கொண்டனர்.