ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும், அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை, இன்று காலை முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகிறது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து இன்று காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.
ஆயிரத்த 506 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், 500 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.