ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட தபால் அலுவலகத்துக்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையைப் பெற முடியும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளவர்களில் 98 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.