வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 600 மில்லியன் ரூபா செலவு

0
72
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலுக்கும் அரச அச்சகத் திணைக்களம் தயாராக உள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.அதேநேரம், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒரு கோடி 70 இலட்சம் வாக்குச் சீட்டுக்களை அச்சிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்புக்கமைய, எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.