வாழைச்சேனையில் வழிப்பிள்ளையார் சிலை உடைப்பு

0
612

மட்டக்களப்பு வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட பிள்ளையார் சிலை இனம்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

1000

இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
70 வருட கால பழைமை வாய்ந்த இரண்டரை அடி உயரமுள்ள சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.