29 C
Colombo
Thursday, June 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் வள அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா நேற்று மாலை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனுடன் கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான தீர்வு காணும் கலந்துரையாடலை மீனவ சங்க அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை கடற்றொழில் வள அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

மீனவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதுடன் குறிப்பாக எரிபொருள் விடயம் தொடர்பாக துறைமுக முகாமையாளர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

துறைமுகத்திற்கு நாளாந்தம் மூன்று லோட் 19800 லீற்றர்,டீசல் மற்றும் ஒரு கிழமைக்கு மூன்று லோட் 19,800 லீற்றர் மண்ணெண்ணையும் கையிருப்பு இருந்தால் மட்டுமே பிரதேச மீனவர்களின் எரிபொருள் தேவையினை நிவர்த்தி செய்யமுடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த விடயத்தை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் கிடைக்கின்ற அளவினைக் கொண்டே நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் எதிர்வரும் திங்கள் கிழமை சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசுகிறேன் எனவும் பதிலளித்தார். அத்துடன் இதுவே நாட்டு நிலைமை என்றும் பதிலளித்தார்.

குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம்,கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசாமில்,மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸ்.நெக்டா நிறுவன உதவிப்பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார் வாழச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் விஜிதரன் மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் விசேடஅதிரடிப்படையினரால்கூரிய ஆயுதங்கள் மீட்பு!

அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன. பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் காவாலிகள் சேட்டை!

நெல்லியடியில் சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.  நெல்லியடி...

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அம்பாறை அக்கரைப்பற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்துள்ளார்.அக்கரைப்பற்றில் பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலைகாணப்பட்டது.ஆயினும் ஆலையடிவேம்புபலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பெற்றோல் இருப்பு இருந்த...

காத்தான்குடியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின நிகழ்வு

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் விழிப்புனர்வு நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.இதன் போது புகைத்தலினால் மது...

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், ஒக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.6.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதழவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு...