தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளை மாத்திரம் நிறைவேற்றுவதற்கு சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்தின் காரணமாக தற்போது கொள்கலன் தாங்கி ஊர்திகள் பாதுகாப்பற்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகக் கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் கொழும்பு துறைமுகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது அவரிடம் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சிலர் பொய்யான தகவல்களை முன்வைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுங்க அதிகாரிகளின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தாங்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகக் கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.