ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை எவராலும் கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நிலை யில் விருப்பு வாக்குகள் தொடர்பிலும் உரையாடல்கள் ஆங்காங்கே தலைநீட்டுகின்றன.
தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட் டிருக்கும் பின்புலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் விருப்பு வாக்குகள் தொடர்பிலும் சிலர் பேச முற்படுகின்றனரெனத் தெரிகின்றது. ஒரு வேளை தென்னிலங்கை வேட்பாளர்கள் அவ்வாறு பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் மக்கள் விருப்பு வாக்குகளை வழங்க முடியுமா? தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்துவிட்டு பிறிதொரு தென்னிலங்கை வாக்காளர் ஒருவருக்கு விருப்பு வாக்க ளிக்க முடியுமா? தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு கொள்கை நிலைப்பாடு. கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் சிந்திக்கும்போது இவ்வாறானதொரு நிலைப்பாட்டை நோக்கி செல்வதைத் தவிர, தமிழ் மக்களுக்கு முன்னால் வேறு எந்தவொரு தெரிவும் இல்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஒரு வரலாற்று முடிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.
ஆனால், இதனைத் திசைதிருப்பும் நோக்கில் விருப்பு வாக்குகள் தொடர்பிலும் பேச்சுகள் அடிபடுகின்றன. தென்பகுதியில் கடும் போட்டிநிலை காணப்படுவதால்தான் இம்முறை விருப்பு வாக்குகள் தொடர்பிலான கவனம் ஏற்பட்டிருக் கின்றது. தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களில் எவருமே ஐம்பது வீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெரும்பான்மையாகப் பெறுபவர்கள் மட்டுமே ஜனாதி பதியாக வரக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை யில்தான் விருப்பு வாக்குகளுக்கான தூண்டில்களையும் சிலர் தயார் செய்கின்றனர் எனத் தெரிகின்றது. விருப்பு வாக்கு ஏன் ஏற்புடையது அல்ல. ஏனெனில், கொள்கை நிலைப்பாடு ஒன்றுக்கு விருப்பு வாக்கு இருக்க முடியாது. ஒரு கொள்கை நிலைப்பாட்டுக்காக தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து விட்டு எவ்வாறு அந்தக் கொள்கை நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களுக்கு வாக்களிக்க முடியும்?
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள மக்கள் விருப்பு வாக்குகளை வழங்க மாட்டார்கள். ஏனெ னில், அநுரவுக்கு வாக்களிப்பவர்களால் ரணிலுக்கு விருப்பு வாக்கு களை அளிக்க முடியாது. இந்த நிலையில் எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்கள் மட்டுமே விருப்பு வாக்குகளை வழங்கும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
ஆனால், ஈழத் தமிழினம் அதனை செய்ய முடியாது. ஏனெனில், அது அரசியல்ரீதியிலும் தர்க்கரீதியிலும் தவறானது. எனவே, தமிழ் மக்களை விருப்பு வாக்குகளின் அடிப்படையில் குழப்பும் சக்திகள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டின் நியாயத்தை சீர்க்குலைக்கும் நோக்கம் கொண்டவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள் ளக்கூடும். அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியல் புத்தெழுச்சி பெறுவதை ஏற்க முடியாதவர்களும் இவ்வாறான குழப்பங்களை மேற்கொள்ளக்கூடும். தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கும் நியாயத்துக்கு முன்னால் விருப்பு வாக்குகள் என்று ஒன்றில்லை – அவ்வாறிருப்பதாக எண்ணுவது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு மாறானது.