தங்காலை – விதாரந்தெனிய பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு மகிழுந்து ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த மகிழுந்து சட்டவிரோதமாக ஒன்றுசேர்த்து தயாரிக்கப்பட்டு சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் எனக் கருதப்படும் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மாத்தறை காவல் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் கைதானார்.களுத்துறை பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் சகோதரர் எம்பிலிபிட்டிய பகுதியிலுள்ள வர்த்தகருக்கு இந்த மகிழுந்தினை விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.