30 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

வீட்டினுள் இறந்த கிடந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன், ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீட்டினுள் இறந்த கிடந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (12) திகதி மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் வழங்கி தகவலினை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பலணியாண்டி வயது 60 மதிக்க தக்கவர் என்றும் இவர் ஒரு முச்சக்கரவண்டி சாரதி என்றும இவர் மூன்று நாளுக்கு முன் இறந்து இருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த நபர் தனது வீட்டின் முன்னுள்ள வீதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் முச்சக்கர வண்டியினை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் திரும்பி தனது முச்சக்கர வண்டியினை எடுக்காததால் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் அவரின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இவர் பற்றி தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததனை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் அவர் நிர்வாணமாக வீட்டினுள் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கூலிக்காக இந்த வீட்டில் தனது 2 ஆம் திருமணமான மனைவியுடன் வாழ்ந்து வந்தாகவும் 2 நாட்களுக்கு முன் அவரின் மனைவி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின் குறித்த நபரையும் காணவில்லை. என்றும் மின்சார பட்டியில் மற்றும் தபால் காரர்கள் வந்து கதவு தட்டிய போதும் திறக்கப்படவில்லை. என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் நோய்வாய்க் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்தரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஹட்டன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்த நரேந்திரன் ஜெயந்திநாத் வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், குறித்த நபர் எனது வீட்டில் தான் கூலிக்கு இருக்கிறார் கடந்த 2 நாட்களுக்கு முன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ எடுக்கப்படவில்லை நாய்கள் அதில் படுத்து உறங்கியதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவரின் மகனுக்கு இந்த தகவலினை வழங்கினேன். அதனை தொடந்து இன்று காலை என்னிடம் அவரது மகன் தொடர்பு கொண்டு அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதனை தொடர்ந்து நான் பொலிஸாருக்கு அறிவித்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக வாய்ச்சுகாதாரம் பேணுதல் தினம்

அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சு.முரளீஸ்வரன் தலைமையில் உலக வாய்ச்சுகாதாரம் பேணுதல் தின நிகழ்வுகள் நடைபெற்றன. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் விநாயகர் மகா வித்தியாலய மாணவர் வரவேற்பு நிகழ்வு

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் மு.சண்டேஸ்வரன்;...

மட்டு.பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழா

மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அம்பாறை கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக வாய்ச்சுகாதாரம் பேணுதல் தினம்

அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சு.முரளீஸ்வரன் தலைமையில் உலக வாய்ச்சுகாதாரம் பேணுதல் தின நிகழ்வுகள் நடைபெற்றன. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்...

அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் விநாயகர் மகா வித்தியாலய மாணவர் வரவேற்பு நிகழ்வு

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் மு.சண்டேஸ்வரன்;...

மட்டு.பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழா

மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மட்டு.சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் வரவேற்பு நிகழ்வு

2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டக்களப்பு சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு வலக்கல்வி அலுவலக கல்வி...

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...