மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பெண்களுக்கான வீட்டு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது
சமூகத்தில் தலைமைத்துவம் வகிக்கும் பெண்களுக்கான வீட்டு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், விவசாய அமைச்சின் ஹக்டர் கொப்பே கடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிர்வாகத்தின் சார்பாக, பிரதேச செயலக ரீதியாக, சமூகத்தில் தலைமைத்துவம் வைக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு
அமைவாக இந்த செயலமர்வு இடம் பெற்றது
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் விவசாய அமைச்சின் ஹக்டர் கொப்பே கடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிர்வாகத்தின்
சார்பாக கலாநிதி சத்துர மற்றும் கலாநிதி ஆனந்த சமரகோன் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட அபிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மட்ட சங்கங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்
Home கிழக்கு செய்திகள் வீட்டு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு காத்தான்குடியில் நடைபெற்றது.