24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெற்றியை வாழ்த்திய இந்தியா: விரைவில் ஜனாதிபதியின் இந்திய பயணம்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு இந்திய நாட்டின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்து தமது வாழ்த்துக்களை அவர் பரிமாறிக்கொண்டார். சக ஜனநாயக நாடாக, இந்தியா மக்களின் ஆணையை வரவேற்கிறது என்றும், இலங்கை மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது என்றும் இதன்போது சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். 

இலங்கையின் வரலாற்றில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், தனிக்கட்சி ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

முதலாவது உத்தியோகபூர்வ பயணம்

இந்தநிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசாங்கத்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.   

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles