25 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கு முன்மொழிவு

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட தேர்தல் சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கான தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு எதிர்காலத்தில் முன்மொழிவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடல் தொடர்பிலான கலந்தரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பின்போது விடயங்களை தெளிவுபடுத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2020-2024 இற்கான தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடலுக்கு அமைய தேர்தல் சட்ட திருத்தத்தை மேற்கொள்வது அத்தியவசியமாகும் என சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கான வைப்பு தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளல், தேர்தல் இடம்பெறும் தினத்தில் வாக்களிப்பதற்கு முடியாத நபர்களுக்கு அதற்கு முன்னதாக ஒரு தினத்தில் வாக்களிக்க வாய்ப்பளித்தல், 18 வயது பூரணமானவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல், தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல், வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையோருக்கான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் விசேட திட்டத்தின் கீழ் இணைய வாக்களிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், பிரதமரின் மேலதிக செயலாளர்களான சமிந்த குலரத்ன, கணேஷ் தர்மவர்தன (சட்டம்), தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.டி.டீ.ஹேரத், பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.அச்சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

உடனடியாக நிறுத்தப்படும் அரிசி இறக்குமதி!

அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று (03) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

கொக்குவிலில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!

கொக்குவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.தாவடி, மதுபானச்சாலைக்கு அண்மையில் இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்தது.மதுபோதையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். பின்னர் கலைந்து...

யானை – மனித மோதல்கள் : 127 பேர் உயிரிழப்பு!

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் யானை – மனித மோதல்களில் 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 395 யானைகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

உடனடியாக நிறுத்தப்படும் அரிசி இறக்குமதி!

அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று (03) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

கொக்குவிலில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!

கொக்குவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.தாவடி, மதுபானச்சாலைக்கு அண்மையில் இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்தது.மதுபோதையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். பின்னர் கலைந்து...

யானை – மனித மோதல்கள் : 127 பேர் உயிரிழப்பு!

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் யானை – மனித மோதல்களில் 127 பேர் உயிரிழந்துள்ளதுடன், 395 யானைகள் உயிரிழந்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர...

‘சம்பிரதாயத்திற்காகவே சந்திரிக்கா மீது நடவடிக்கை’

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்பிரதாயத்திற்கு அமையவே நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்....

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் இருபது வயதுடைய இளைஞனைக் காணவில்லை!

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் இருபது வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.குறித்த இளைஞன் காணாமல்போயுள்ளதாக அவரது தாயார் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின்...