ஹெக்டர் கொப்பேகடுவ நிலையத்தில் இடம்பெற்ற, அமரர் ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களின் 37ஆவது நினைவு தின நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று 2020.09.18 கலந்து கொண்டார்.
ஹெக்டர் கொப்பேகடுவ மன்றம் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களின் உருவச்சிலைக்கு மலர்ச் செண்டு வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது ஹெக்டர் கொப்பேகடுவ மன்றத்தினால் பிரதமருக்கு நினைவு பரிசும், நினைவு மலரும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான ஷஷீந்திர ராஜபக்ஷ, அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு